என் இதழில் உன் வாசம் ,
என் கூந்தலில் உன் கைகள்,
என் நிறத்தில் உன் நிறமும்,
இணைந்து பிணைந்து ,
இது தான் காதலா...
உன்முகத்தில் சில மாற்றம் ,
ஒரு குறும்பு கலந்த தோற்றம்,
நான் நழுவி தழுவி, நீ எட்டி பிடிக்க ,
இது தான் காதலா...
இமைகள் கூட கடிக்கும்,
முள் குத்தும் மீசை கொஞ்சும்,
நேசம் நேசம், ஆசை ஆசை,காதல் காதல்,
கலந்து...
ஒரு நீர் வீழ்ச்சி போல் அனுபவம்...
இது தான் காதலா..
அமைதியான ஆவேசம்,
வேகமான காதல்,
போய்கொண்டே இருக்கும் ...
முடிந்தாலும் மீண்டும் மீண்டும் கேட்கும்,
நேசிக்கும் மனம்!!!
Friday, January 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment